புது டெல்லி: விலை உயர்வின் காரணமாக அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தது, வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.