1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சீனா‌வி‌ற்கு ம‌த்‌திய அரசு ‌வி‌ட்டு‌க்கொடு‌க்‌கிறது: பா.ஜ.க.!

இடதுசா‌ரி பா.ஜ.க. ரா‌ஜ்நா‌‌த் ‌சி‌ங் இ‌ந்‌தியா
இடதுசா‌ரிக‌ளி‌ன் ஆதரவு தேவை எ‌ன்பதா‌ல் இ‌ந்‌திய எ‌ல்லைகளை ‌சீனா‌வி‌ற்கு ‌வி‌ட்டு‌க்கொடு‌க்கு‌ம் போ‌க்‌கி‌ல் ம‌த்‌திய அரசு செய‌ல்படு‌கிறது எ‌‌ன்று பா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌‌ள்ளது.

இதுகு‌றி‌த்து மு‌ம்பை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பா.ஜ.க. தலைவ‌ர் ரா‌ஜ்நா‌‌த் ‌சி‌ங், "இ‌ந்‌திய‌ப் பகு‌திகளை‌ச் சொ‌ந்த‌ம் கொ‌ண்டாடு‌ம் ‌சீனா‌விட‌ம் ‌வி‌ட்டு‌க்கொடு‌க்கு‌ம் போ‌க்‌கி‌ல் இ‌ந்‌தியா நட‌ந்து கொ‌‌ள்‌கிறது. இடதுசா‌ரிக‌ளி‌ன் ஆதரவு தேவை எ‌ன்பதா‌ல் இ‌ந்‌தியா கோழை‌த்தனமாக நட‌ந்து கொ‌ள்‌கிறது" எ‌ன்றா‌ர்.

பண‌வீ‌க்க‌ம் அ‌திக‌ரி‌க்க ம‌த்‌திய அர‌சி‌ன் தவறான பொருளாதார‌க் கொ‌ள்கைகளே காரண‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

நமது நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌த்தை ‌விட பண‌வீ‌க்க‌ம் அ‌திகமாக இரு‌ந்து வரு‌கிறது. இத‌ற்கு ம‌த்‌திய அர‌சி‌ன் தவறான பொருளாதார‌க் கொ‌ள்கைகளே காரண‌ம் எ‌ன்பதா‌ல், ம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் பொதும‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங்.