1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌ம் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்!

ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌ர் பாரமு‌ல்லா ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் பாரமு‌ல்லா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌‌மி‌ன் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ஸ்ரீநக‌ரி‌ல் இரு‌ந்து 55 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் சோப‌ர் எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌மி‌ன் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் கையெ‌றி கு‌ண்டுகளை ‌வீ‌சி‌த் தா‌க்‌கியு‌ள்ளன‌ர். இதையடு‌த்து‌ப் படை‌யினரு‌ம் எ‌தி‌ர்‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

நே‌‌ற்‌றிரவு 8.10 ம‌ணி‌ அள‌வி‌ல் நட‌ந்த இ‌ந்த மோத‌லி‌ல், இருதர‌ப்‌பிலு‌ம் எ‌ந்த‌ச் சேதமு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.