1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி மய‌ங்‌கி ‌விழு‌ந்தா‌ர்!

அ‌ந்தோ‌ணி அமை‌ச்ச‌ர்
தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு‌க் கழக‌த்‌தி‌ல் ப‌யி‌ற்‌சி முடி‌த்த ‌வீர‌ர்க‌ளி‌ன் அ‌ணிவகு‌ப்பை ஏ‌ற்று‌க்கொ‌‌ள்ளு‌ம் போது பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி மேடை‌யிலேயே மய‌ங்‌கி ‌விழு‌ந்ததா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

மரா‌ட்டிய மா‌நில‌ம் காட‌க்வ‌ஸ்லா‌வி‌ல் உ‌ள்ள தே‌சிய‌ப் ப‌ாதுகா‌ப்பு‌க் கழக‌த்‌தி‌ல் ப‌யி‌ற்‌சி முடி‌த்த ‌வீ‌ர‌ர்களு‌க்கு ‌விருது வழ‌ங்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி இ‌ன்று அ‌திகாலை நட‌ந்தது. இ‌தி‌ல் பாதுகா‌‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே. அ‌ந்தோ‌ணி ப‌ங்கே‌ற்றா‌ர்.

‌விருதுகளை வழ‌ங்‌கி முடி‌த்தது‌ம் ‌வீர‌ர்க‌ளி‌ன் அ‌ணிவகு‌ப்பை ஏ‌ற்று‌க் கொ‌‌ள்வத‌ற்காக மே‌டை‌யி‌ல் ‌நி‌ன்றபோது, அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி ‌திடீரென மய‌ங்‌கி‌ச் ச‌ரி‌ந்தா‌ர். அவரை அரு‌கி‌ல் இரு‌ந்த அ‌திகா‌ரிக‌ள் தா‌ங்‌கி‌ப் ‌பிடி‌த்து இரு‌க்கை‌யி‌ல் அமர வை‌த்தன‌ர்.

‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் ‌நினைவு ‌திரு‌ம்‌பிய அமை‌ச்ச‌ர் ஏ.கே.அ‌ந்தோ‌ணி, மேடை‌யிலேயே வா‌ந்‌தி எடு‌த்தா‌‌ர். இதையடு‌த்து அவரை உடனடியாக வளாக‌த்‌தி‌ல் உ‌ள்ள ராணுவ மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌த்ததன‌ர்.

68 வயதாகு‌ம் அமை‌ச்ச‌ர் ஏ.கே. அ‌ந்தோ‌ணி த‌ற்போது நலமுட‌ன் உ‌ள்ளதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர். அவரு‌க்கு இதய‌ப் ப‌ரிசோதனைக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.