1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கு‌ஜ்ஜா‌ர்களு‌க்கு 6 ‌விழு‌க்காடு வரை ஒது‌க்‌கீடு: வசு‌ந்தரா கோ‌ரி‌க்கை!

கு‌ஜ்ஜா‌ர் வசு‌ந்தரா ராஜே ரா‌ஜ‌‌ஸ்தா‌ன்
கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்களு‌க்கு 4 முத‌ல் 6 ‌விழு‌க்காடு ‌சிற‌ப்பு ஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரு‌க்கு ரா‌ஜ‌‌ஸ்தா‌ன் முத‌ல்வ‌ர் வசு‌ந்தரா ராஜே கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

கு‌ஜ்ஜா‌ர் இன ம‌க்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கை தொட‌ர்பாக ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட மா‌நில முத‌ல்வ‌ர்க‌ளி‌ன் கூ‌ட்ட‌த்தை‌க் கூ‌ட்டி ‌விவா‌தி‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், இ‌ந்த‌ச் ‌சி‌‌க்க‌ல் ‌மிகவு‌ம் உண‌ர்வுபூ‌ர்வமானது எ‌ன்று‌ம், கு‌ஜ்ஜா‌ர்களு‌‌க்கு பழ‌ங்குடி‌யின‌ர் அ‌ந்த‌ஸ்து வழ‌ங்குவது கு‌றி‌த்து ஐ.மு.கூ. அரசு ‌க‌ண்டி‌ப்பாக முடிவெடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌விடய‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு ஒரு கொ‌ள்கையை உருவா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வசு‌ந்தரா ராஜே கோ‌ரியு‌ள்ளதாக ராஜ‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற ‌விவகார அமை‌ச்ச‌ர் ஆ‌ர்.எ‌‌ஸ்.ர‌த்தோ‌ர் செ‌‌‌ய்‌தியாள‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.