1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

க‌ர்நாடக‌த் தே‌ர்த‌ல் : பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி!

க‌ர்நாடக‌த் தே‌ர்த‌ல் பாஜக
க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌ப்பேரவை‌த் தே‌ர்த‌லி‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி அமை‌‌ப்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

224 தொகு‌திகளை‌க் கொ‌‌ண்ட க‌ர்நாடக ச‌ட்டம‌ன்ற‌த்‌‌தி‌ற்கு ஆ‌ட்‌சி அமை‌க்க 113 தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்‌றாக வே‌ண்டு‌ம். ஆனா‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. 3 இட‌ங்க‌ள் குறைவாக உ‌ள்ளது.

எ‌னினு‌ம் சுயே‌ட்சைக‌ளி‌ன் ஆதரவுட‌ன் க‌ர்நாடக‌த்‌தி‌ல் பாஜகவே ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌ப்பேரவை‌‌க்கு 3 க‌ட்ட‌ங்களாக‌த் தே‌ர்த‌‌ல் நடைப‌ெ‌ற்றது. தே‌ர்த‌லி‌ல் ப‌திவான வா‌க்குக‌ள் இ‌ன்று காலை 8 ம‌ணி முத‌ல் எ‌‌ண்‌ண‌ப்ப‌ட்டன.

‌எ‌ண்‌ணி‌க்கை முடி‌வி‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 80 இட‌ங்க‌ளிலு‌ம், மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 28 இட‌ங்க‌ளிலு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் த‌விர சுயே‌ட்சைக‌ள் 5 பே‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளன‌ர். எனவே இவ‌ர்க‌ளி‌ன் ஆதரவுட‌ன் பாஜக ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது.

கலை‌க்க‌ப்ப‌‌ட்ட க‌ர்நாடக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் 58 இட‌ங்களை‌ப் பெ‌ற்‌றிரு‌ந்த மு‌ன்னா‌ள் ‌பிரதம‌‌ர் தேவேகெளடா‌வி‌ன் மத‌ச்சா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம், இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் 28 இட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

‌வி‌‌ந்‌திய மலை‌க்கு‌த் தெ‌ற்கே முத‌ல் முறையாக ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் வா‌ய்‌ப்பு ஒரு த‌னி‌ப்பெரு‌ம் க‌ட்‌சியாக பாஜக‌வி‌ற்கு முத‌ன்முறையாக‌க் ‌கி‌ட்டியு‌ள்ளது.

தே‌ர்த‌ல் தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட போதே, க‌ர்நாடக தே‌ர்த‌லி‌ல் பாஜக வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்று எமது ஜோ‌திட‌ர் ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் கே.‌பி. ‌வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.