1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சு‌ர்‌‌ஜி‌த் உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம்!

மரு‌த்துவமனை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்
மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌‌ற்றுவரு‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன் உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் இரு‌ப்பதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

"சு‌ர்‌ஜி‌த் உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்‌ற‌ம் உ‌ள்ளது. ஆனா‌ல், ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌ப் ‌பி‌ரி‌வி‌ல் இரு‌ந்து அவ‌ர் மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ல் ம‌ட்டுமே அவ‌ர் அபாயக‌ட்ட‌த்தை‌த் தா‌ண்டி ‌வி‌ட்டதாக‌க் கூற முடியு‌ம்" எ‌ன்று இதய அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் மரு‌த்துவ‌ர் புருஷோ‌த்த‌ம் லா‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"கோமா‌வி‌ல் இரு‌ந்து ‌விடுப‌ட்டது‌ம் சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த உட‌ல்‌நிலை‌யி‌ல் மு‌ன்னே‌ற்ற‌ம் காண‌ப்ப‌ட்டது. த‌ற்போது‌ அவ‌ர் ‌தீ‌விர க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ல் உ‌ள்ளா‌ர்" எ‌ன்றா‌ர் அவ‌ர்.

த‌ற்போது 92 வயதாகு‌ம் சு‌ர்‌ஜி‌த், இதய அடை‌ப்‌பி‌ன் காரணமாக கட‌ந்த மா‌ர்‌ச் 6ஆ‌ம் தே‌தி மெ‌ட்ரோ மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.