புதுடெல்லி: ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த ஹூஜி (ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி) என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதியை டெல்லியில் காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். அவனிடம் இருந்து 3.1 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டது.