1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உத்தராகண்ட் பேருந்து விபத்தில் 15 பேர் பலி!

உத்தராகண்ட் பிதோரகார் பேருந்து பாகேஷ்வர்
உத்தராகண்ட் மா‌நிலம், பிதோரகார் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் காயமடைந்தனர்.

பிதோரகாரிலிருந்து பாகேஷ்வர் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாடு இழந்து கால்வாயில் விழுந்தது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது இன்னமும் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்குள்ளானோரை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.