1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாடாளும‌ன்ற‌‌த் தா‌க்குத‌ல் வழ‌க்கு: செளக‌த் மனு ‌நிராக‌ரி‌ப்பு!

நாடாளும‌ன்ற‌‌ம் செளக‌த் ஹூசை‌ன் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்
நாடாளும‌ன்ற‌‌ம் ‌மீதான தா‌க்குத‌ல் வழ‌க்‌கி‌ல் 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌த் த‌ண்டனை பெ‌ற்று‌ள்ள செளக‌த் ஹூசை‌ன், தனது த‌ண்டனையை எ‌தி‌ர்‌த்து‌த் தொட‌ர்‌ந்த வழ‌க்கை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

நாடாளும‌ன்ற‌‌ம் ‌மீதான தா‌க்குத‌ல் வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட செளக‌த்‌தி‌ற்கு கட‌‌ந்த 2001 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 13 ஆ‌ம் தே‌தி மரண த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌த்த‌ண்டனையை டெ‌ல்‌லி உய‌‌‌ர் ‌நீ‌திம‌ன்றமு‌ம் உறு‌தி செ‌ய்தது.

இரு‌ந்தாலு‌ம், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல் செளக‌த் மே‌ல்முறை‌யீடு செ‌ய்தபோது, கட‌ந்த 2005 ஆ‌ம் ஆ‌ண்டு ஆக‌ஸ்‌ட் 4 ஆ‌ம் தே‌தி, அவரு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட மரண த‌ண்டனை 10 ஆ‌ண்டு கடு‌‌ங்காவ‌ல் ‌சிறை த‌ண்டனையாக குறை‌க்க‌ப்ப‌ட்டது.

இதை எ‌தி‌ர்‌த்து ‌மீ‌ண்டு‌ம் செளக‌த் தொட‌ர்‌ந்த மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், அதை இ‌ன்று ‌நிராக‌ரி‌த்தது.

"நா‌ங்க‌ள் வழ‌ங்‌கிய த‌ண்டனையை‌க் குறை‌ப்பத‌ற்கு எ‌ந்த‌க் காரணமு‌ம் இ‌ல்லை" எ‌ன்று வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ‌பி.‌பி.ந‌வ்லேக‌ர் தலைமை‌யிலான அம‌ர்வு கு‌றி‌ப்‌பி‌ட்டது.