1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌ல்!

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌தி
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌த்‌தி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌ற்‌சி மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். உ‌ள்‌ளி‌ட்ட ஆயுத‌ங்க‌ள் ப‌‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக எ‌ல்லை‌ப் பாதுபா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ச‌ம்பா மா‌வ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள சுஜா‌னி வன‌ப் பகு‌தி‌யி‌ல் நே‌ற்று ச‌ர்வதேச எ‌ல்லை‌க் கோ‌ட்டை‌த் தா‌ண்டி இ‌ந்‌தியா‌வி‌ற்‌கு‌ள் ஊடுருவ முய‌ன்ற பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் முய‌ற்‌சியை பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் மு‌றியடி‌த்தன‌ர்.

இதையடு‌த்து அ‌ப்பகு‌தி‌யி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் மே‌ற்கொ‌ண்ட ‌தீ‌விர‌த் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல், 10 ‌கிலோ ஆ‌‌ர்.டி.எ‌க்‌ஸ், 2 இய‌ந்‌திர‌த் து‌ப்பா‌க்‌கிக‌ள், தகவ‌ல் தொட‌ர்பு‌க் கரு‌விக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட பய‌ங்கர ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக அ‌திகா‌‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.