1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உல்ஃபா தீவிரவாதிகள் 2 பேர் பலி!

உல்ஃபா தீவிரவாதிகள் 2 பேர் பலி!
திப்ருகார்(அசாம்): அசாமில் உல்ஃபா தீவிவாத முகாம் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் பலியாயினர். மேலும் 7 பேர் சரணடைந்தனர்.

நேற்று மாலை பாதுகாப்பு படையினர் பென்கேரி காவல் நிலைய சரகத்தின் கீழ் வரும் ஹஞ்சன் கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தினர்.

தீவிரவாத முகாமிலிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களை கைப்பற்றினர்.

நேற்று நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் பர்பத்பூர் தீவிரவாத முகாமிலிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
About Writer
Webdunia