புது டெல்லி: கடந்த சில தினங்களாக கொளுத்தி வரும் வெயிலுக்கு நாடு முழுதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஆந்திரா, ஒரிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் வெயிலுக்கு மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.