1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌மியா‌ன்மரு‌க்கு இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளி‌ல் ‌நிவாரண‌ம்: இ‌ந்‌‌தியா!

புய‌ல் இ‌‌ந்‌தியா ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி
புய‌ல் தா‌க்‌கிய‌தி‌ல் கடுமையாக‌ப் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்மரு‌க்கு 2 போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌‌ளி‌‌ல் உணவு ம‌ற்று‌ம் மரு‌ந்து‌‌ப் பொரு‌ட்க‌ளை இ‌‌ந்‌தியா அனு‌ப்பு‌கிறது.

அ‌ந்தமா‌ன் தலைநக‌ர் போ‌ர்‌ட் ‌பிளே‌ரி‌ல் இரு‌ந்து யா‌ங்கூனு‌க்கு‌ச் செ‌ல்லவு‌ள்ள போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ளி‌ல் உணவு‌ப் பொரு‌ட்க‌ள், கூடார‌ங்க‌‌ள், போ‌ர்வைக‌ள், உடைக‌ள் ம‌ற்று‌ம் மரு‌ந்துக‌ள் இரு‌க்கு‌ம் எ‌ன்று அயலுறவு அமை‌ச்சக‌ம் இ‌ன்று அ‌றி‌வி‌த்தது.

இய‌ற்கை‌ப் பே‌ரிடரா‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மியா‌ன்ம‌‌ர் ம‌க்களு‌க்கு‌த் த‌ங்க‌ளி‌ன் ஆ‌ழ்‌ந்த அனுதாப‌ங்களை குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ஆ‌கியோ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

‌மீ‌ட்பு ப‌ணிகளு‌க்கு‌த் தேவையான உத‌விகளை உடனடியாக வழ‌ங்குவத‌ற்கு‌த் தா‌ங்க‌ள் தயாராக உ‌ள்ளதாக ‌மியா‌ன்ம‌ர் அர‌சி‌ற்கு இ‌ந்‌தியா தகவ‌ல் அனு‌ப்‌பியு‌ள்ளது.