இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடசாரிக் கட்சிகள் உயர்மட்டக் குழு வருகிற 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது. அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் விவாதித்து மத்திய அரசு இறுதிசெய்துள்ள விவரங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா...