1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டி.ஆ‌ர். பாலு பத‌வி‌விலக வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. வ‌லியுறு‌த்த‌ல்!

டி.ஆ‌ர்.பாலு பா.ஜ.க. அ‌த்வா‌னி ம‌ல்ஹோ‌த்ரா
அ‌திகார‌த்தை தவறாக‌ப் பய‌ன்படு‌த்‌திய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு உட‌னடியாக‌ப் பத‌வி‌விலக வே‌‌ண்டு‌ம் எ‌ன்று பா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று நட‌ந்த பா.ஜ.க. நாடாளும‌ன்ற‌க் குழு‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னி ம‌த்‌திய அமை‌ச்ச‌‌ர் ‌மீதான கு‌ற்ற‌ச்சா‌ற்று கு‌றி‌த்து ‌விள‌க்‌கினா‌ர்.

"இது ஒரு கறைபடி‌ந்த அமை‌ச்ச‌ர்க‌ளி‌ன் அரசு. இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விள‌க்கம‌ளி‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். ‌தி.மு.க. அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு உடனடியாக‌ப் பத‌வி‌விலக வே‌ண்டு‌ம்" எ‌ன்று அ‌த்வா‌னி வ‌லியுறு‌த்‌தியதாக பா.ஜ.க. ‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ளி‌‌ல் ஒருவரான ‌வி.கே. ம‌ல்ஹோ‌த்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.