1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ராஜ‌ஸ்தா‌னி‌ல் சாலை ‌விப‌த்‌து: 5 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 24 பே‌ர் ப‌லி!

ராஜ‌ஸ்தா‌‌ன் ஜோ‌த்பூ‌ர் கோனோடியா மதுரா‌ஸ் மா‌த்தூ‌ர்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் ‌‌மி‌னி லா‌ரியு‌ம், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் வேனில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜோத்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கனோடியா என்ற கிராமம் அருகே நேற்றிரவு அந்த வேன் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ‌மி‌னி லா‌ரி மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதாக காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்ததாகவும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் அவர் கூறினார். இதில் 7 பேர் பெண்கள் என்றும் 5 பேர் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.