1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஏ‌ப்ர‌ல் 10 முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம் ர‌த்து: க‌ன்னட அமை‌ப்புக‌ள் அ‌றி‌வி‌ப்பு!

ஒகேன‌க்க‌ல் கருணா‌நி‌தி க‌ர்நாடக ர‌க்ஷன வே‌திகா
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌‌த் ‌தி‌ட்ட‌த்தை எ‌தி‌ர்‌த்து ஏ‌ப்ர‌ல் 10 ஆ‌ம் தே‌தி நட‌க்க‌விரு‌ந்த முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌‌ம் ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாக க‌ன்னட அமை‌ப்புக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன.

க‌ர்நாடக‌த்‌தி‌ல் பு‌திய அரசு அமையு‌ம் வரை ஒகேன‌க்க‌ல் ‌கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் தி‌ட்ட‌த்தை‌த் தனது அரசு ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாக த‌மிழக முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌க்கை வெ‌ளி‌யி‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து இ‌ம்முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக அ‌வ்வமை‌ப்புக‌ள் கூ‌றியு‌ள்ளன.

இரு‌ந்தாலு‌ம், மா‌நில‌த்‌‌தி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌திரையர‌ங்குக‌ளி‌ல் த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ‌திரை‌யிட‌ப்படுவது தொட‌ர்‌ந்து தடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று க‌ர்நாடக ர‌க்ஷன வே‌திகா அமை‌ப்பு ‌பி.டி.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌ம் கூ‌றியு‌ள்ளது.

அ‌கில க‌ர்நாடகா காடி ஹொர‌ட்டா ச‌மி‌தி அமை‌ப்‌பி‌ன் ‌கீ‌ழ் இய‌ங்கு‌ம் க‌ன்னட ஆதரவு அமை‌ப்புக‌ள் அனை‌த்து‌ம், த‌மிழக‌த்‌தி‌ற்கு எ‌திராக அ‌றி‌வி‌த்‌திரு‌ந்த முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்தை‌ ர‌த்து செ‌ய்வதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளன.