1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு: பெ‌ங்களூரு‌வி‌ல் த‌மி‌‌ழ்‌த் ‌திரையர‌ங்குக‌ள் சூறை!

ஒகேன‌க்க‌ல் பெ‌ங்களூரு செ‌ன்னை கருணா‌நி‌தி
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌‌ரி‌வி‌த்து பெ‌ங்களூரு‌வி‌ல் த‌‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஓடு‌ம் ‌திரையர‌ங்குகளை க‌ன்னட அமை‌ப்‌பின‌ர் இ‌ன்று அடி‌த்துநொறு‌க்‌கின‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் வட‌க்கு உ‌ஸ்மா‌ன் சாலை- மகா‌லி‌ங்கபுர‌ம் சாலை ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட பு‌திய மே‌ம்பால‌த்தை ஞா‌யி‌ற்று‌க் ‌கிழமை ‌திற‌ந்து வை‌த்து‌ப் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, "ஒகேன‌க்க‌ல் ‌குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌ல் த‌மிழக‌ப் பேரு‌ந்துகளை உடை‌ப்போ‌ம் எ‌ன்று க‌ன்னட‌ர்க‌ள் கூ‌றியதாக‌த் தகவ‌ல்க‌ள் வ‌ந்து‌ள்ளன. பேரு‌ந்துகளை அ‌ல்ல, எ‌ங்க‌ள் எலு‌ம்புகளை உடை‌த்தாலு‌ம் ச‌ரி, ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றியே ‌தீருவோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்து இ‌ன்று க‌ன்னட ர‌‌க்சன வே‌திகே எ‌ன்ற அமை‌ப்‌பின‌ர் பெ‌ங்களூரு‌வி‌ல் த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஒடு‌ம் ‌திரையர‌ங்குகளை சூறையாடின‌ர்.

ஏ‌ப்ர‌ல் 9 ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌த் த‌மிழக அரசு கை‌விட‌வி‌ல்லை எ‌ன்றா‌‌ல் த‌மிழக‌ப் பேரு‌ந்துகளை தடு‌த்து ‌நிறு‌த்துவோ‌ம், த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்களை ஓட ‌விடமா‌ட்டோ‌ம் எ‌ன்று‌ம் அ‌வ்வமை‌ப்‌பின‌ர் எ‌ச்ச‌ரி‌த்தன‌ர்.