1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெல்லி: அடுக்குமாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி!

வடகிழக்கு டெல்லி நியூ உஸ்மான்பூ‌ர் அடுக்குமாடி கட்டிடம் குரு தேக் பகதூர் மருத்துவமனை
வடகிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூரில் புதியதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை நடந்த இந்த விபத்தில் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காயமடைந்தவர்களுக்கு குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தான் இந்த விபத்தில் அதிகளவில் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர்.
About Writer
Webdunia