1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புது‌ச்சே‌ரி ப‌ட்ஜெ‌ட்டி‌ல் ப‌ல்வேறு ‌தி‌ட்ட‌‌ங்க‌ள் அ‌றிமுக‌ம்!

பு‌து‌ச்சே‌ரி ப‌ட்ஜெ‌ட் ‌முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி
பு‌து‌ச்சே‌ரி‌யி‌ல் 2008-09ஆ‌ம் ஆ‌‌ண்டி‌ற்கான ப‌ட்ஜெ‌ட்டை ‌முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

* ரூ.2 கோடி‌யி‌ல் 'துல்லியப் பண்ணை முறை' என்னும் புதிய திட்டம் அறிமுக‌ம். இது கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும்.

* விவசாய சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படும்.

* கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு மா‌னிய ‌விலை‌யி‌ல் கோழிகள், வான்கோழிகள்.

* வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளு‌க்கு தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.4.50 மானியம்.

* லிங்காரெட்டிப்பாளையம், மடுகரையில் புதுச்சேரி விற்பனைக் குழுவின் இரண்டு துணை விற்பனை மையங்க‌ள் தொட‌ங்க‌ப்படு‌கிறது.

* 295 ஏக்கர் பரப்பில் நன்னீர் மீன் வளர்க்கப்படும்.

* 16,000 மீனவர்களுக்கு உயிர்காப்பு சாதனங்கள் இலவச‌ம்.

* 20 மீனவர்களுக்கு, வலைகளுடன் எப்ஆர்பி படகுகள், காக்கிநாடா படகுகள் வாங்குவதற்கு மானியம்.

* பனிக்கட்டி வைக்கும் பெட்டியுடன் கூடிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு 12 மீனவப் பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியம் அளிக்கப்படும்.

* பு‌திதாக மீன்பிடி பயிற்சி நிறுவனம் அமைக்கப்படு‌ம்.

* மீனவ மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் முதலீட்டுச் செலவில் 50 விழுக்காடு மானியம்.

* தொ‌ழி‌ல் செ‌ய்யு‌ம் போது மரணம் அடையும் மீனவர்களுக்கு ரூ.1.50 நஷ்ட ஈடு.

* விவசாயக் கடன் அளிக்க ரூ.20 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பயிர்க் கடனின் மீதான வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறை‌ப்பு.

* மாநில கூட்டுறவு ஒன்றியம், வேலைவாய்ப்பு அளிக்கும் பாடப்பிரிவுகளைக் கொண்டு தொழில்நுட்பப் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவ‌க்க‌ம்.

* 2008-09ம் ஆண்டில் 5,000 கறவை மாடுகள் வாங்கி சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு 50 ‌விழு‌க்காடு மானியம்.

* கூட்டுறவு வீட்டு வசதி இணைய உறுப்பினர்க‌ள் 1,000 பேரு‌க்கு ரூ.30 கோடி‌யி‌ல் கட‌ன்.

* கூட்டுறவு கட்டட மையம் நிலக்கரிச் சாம்பலைக் கொண்டு கல் தயாரிக்கும் தொழிற்சாலை.

* சிகப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேஷ‌ன் கடைக‌ள் மூல‌ம் மா‌னிய ‌விலை‌யி‌ல் 5 மளிகைப் பொருட்கள்.

* அய‌ல்நாட்டுவாழ் இந்தியர், இந்திய வம்சா வழியினருக்காக தனியாக இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.