1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஆந்திராவில் இரயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்பு!

ஆ‌ந்‌திரா விஜயநகர‌ம் மாவோ‌யி‌‌‌ஸ்‌ட் ‌தீ‌‌விரவா‌திக‌ள்‌ குமதா இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம்
ஆ‌ந்‌திர மா‌நில‌ம் ‌விஜயநகர‌ம் மாவ‌‌ட்ட‌த்‌தி‌ல் நே‌ற்று ந‌ள்‌ளிரவு மாவோ‌யி‌‌‌ஸ்‌ட் ‌தீ‌‌விரவா‌திக‌ள்‌ கு‌ண்டு ‌வீ‌சி ‌திடீ‌ர்‌ தா‌க்குத‌ல் நட‌த்‌தி‌ன‌ர்.

‌கிழ‌க்கு இர‌யி‌ல்வே‌க்கு உ‌ட்ப‌ட்ட குமதா இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் 3 பெ‌ண் உ‌ள்பட 7 பே‌ர் கொ‌‌ண்ட மாவோ‌யி‌‌ஸ்‌ட் ‌‌தீ‌‌விரவா‌‌திக‌ள் அ‌திரடியாக புகு‌‌ந்து அ‌ங்கு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த 4 இர‌யி‌ல்வே ஊ‌‌ழிய‌ர்களை வெ‌ளியேறு‌ம்படி கூ‌றின‌ர்.

‌பி‌ன்ன‌ர் அ‌வ‌ர்க‌ள் இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் கு‌ண்டு ‌வீ‌சி தா‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் ‌சி‌‌க்ன‌ல் க‌ட்டு‌ப்பாடு கரு‌வி‌க‌ள் கடுமையாக சேதமடை‌ந்தன‌.‌

இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்பா‌‌ல் ஆ‌ந்‌திர‌ ‌பிரதேச‌ம்- ஒ‌ரி‌ஸ்ஸா இடையே இர‌யி‌ல் போ‌‌க்குவர‌த்து பா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்டது.