1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி தப்பிப்பு!

லஷ்கர்-ஈ-தயீபா ஜம்மு காஷ்மீர் தோடா
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா சிறையில் இருந்து லஷ்கர்-ஈ-தயீபா தீவிரவாதி ஒருவன் தப்பித்து சென்றதால், இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தோடா மாவட்டத்திற்கு உட்பட்ட பதர்வா பகுதிக்கு ஆயுதங்கள், வெடி பொருட்கள் கடத்திகுற்றத்திற்காக லஷ்கர்-ஈ-தயீபாவை சேர்ந்த அப்துல் குஃதிர் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர். இவன் தோடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு தப்பித்துள்ளான்.

இதுசம்பந்தமாக ரோமல் சந்த், ஹவால்தார் ஜோதி பிரகாஷ் ஆகிய இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia