1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அணுச‌க்‌தி‌க்கு நா‌ங்க‌ள் எ‌தி‌ரிய‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

அணுச‌க்‌தி‌ மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி
அணுச‌க்‌தி‌யை தா‌ங்க‌ள் எ‌தி‌ர்‌க்க‌வி‌‌ல்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் எ‌வ்வாறு அ‌த்தேவையை ‌நிறைவு செ‌‌ய்யு‌‌ம் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளது.

இது கு‌றி‌‌த்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் அரச‌ி‌ய‌ல் தலைமை‌க் குழு உறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், "123 ஒ‌ப்ப‌ந்த‌ம், ஹை‌ட் ச‌ட்ட‌த்‌‌தி‌ன் ‌நிப‌ந்தனைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் எ‌ரிச‌க்‌தி‌த் தேவையை ‌நிறைவு செ‌ய்ய ஒ‌ப்ப‌ந்த‌ம் எ‌ப்படி உதவு‌ம்" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, "சுற்றுச்சூழக்கு மாசு ஏற்படாமல், வளங்களை விரிவுபடுத்தும் வகையில் அணுசக்தி வளம் மேம்படுத்தப்பட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்பட வேண்டும், என்று பிரதமர் கூறினார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.