1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெ‌ல்‌லி வருமான வ‌ரி‌த்துறை க‌ட்டட‌த்‌தி‌ல் ‌தீ!

டெ‌‌ல்‌லி‌ வருமான வ‌ரி‌த்துறை க‌ட்டட அலுவலக‌‌‌ம் த‌ஸ்தாவேஜு
டெ‌‌ல்‌லி‌யி‌ல் ‌உ‌‌ள்ள வருமான வ‌ரி‌த்துறை க‌ட்டட அலுவலக‌த்‌தி‌ல் இ‌ன்று காலை ‌சி‌றிய அள‌வி‌ல் ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் இர‌ண்டாவது மாடி‌யி‌ல் உ‌ள்ள த‌ஸ்தாவேஜு, ‌மி‌ன் சாதன‌ங்க‌ள் இரு‌ந்த அறை‌யி‌ல் ‌‌தீ ‌‌‌விப‌த்து ஏ‌ற்ப‌‌ட்டது. இது ப‌ற்‌றி உடனடியாக காலை 11 ம‌ணியள‌வி‌ல் ‌தீயணை‌ப்‌பு‌த் துறை‌யினரு‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

உடனடியாக ‌நிக‌ழ்‌விட‌த்து‌ ‌5 ‌தீயணை‌ப்‌பு வாகன‌த்‌தி‌ல் ‌விரை‌ந்து வ‌ந்த தீயணை‌ப்பு‌த்துறை‌யின‌ர் 10 ‌நி‌மிட‌ங்க‌ளி‌ல் அ‌ங்கு பர‌வி‌க்கொ‌‌‌ண்டிரு‌ந்த ‌தீ‌யை க‌ட்டு‌ப்படு‌த்‌தி‌ன‌ர். இதனா‌ல் பெரு‌‌ம் ‌‌தீ ‌‌விப‌த்து த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.

தீ ‌விப‌த்‌தி‌ல் எ‌ரி‌ந்து போன த‌ஸ்தாவேஜுக‌ள் கு‌றி‌த்த ம‌தி‌ப்‌பீடு நட‌ந்து வரு‌கிறது. ‌தீ ‌விப‌த்து‌க்கான காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி ‌‌விசாரணை நடைபெ‌ற்று வரு‌கிறது.