1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஸ்ரீநக‌ரி‌ல் மோத‌ல் : 4 வீரர்கள் ப‌லி! லஸ்கர் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர் லஸ்கர்-ஈ-தய்பா பயங்கரவாதி மத்திய கூடுதல் காவற்படை
ஸ்ரீநகரில் காவல் துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 வீரர்களும், லஸ்கர்-ஈ-தய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்!

ஸ்ரீநகர் ஹர்வான்-ஹஸ்ரத்பால் நெடுஞ்சாலையில் உள்ள டெல்பால் என்ற இடத்தில் உள்ளூர் காவல் துறையினரும், மத்திய கூடுதல் காவற்படையினரும் கூட்டாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இம்மோதல் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இம்மோதலில் காவல் துறையினர் 3 பேரும், மத்திய கூடுதல் காவற்படையைச் சேர்ந்த ஜவான் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், துணை ஆய்வாளர் உட்பட 3 பேர் பேர் காயமடைந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

மோதலில் கொல்லப்பட்ட லஸ்கர் பயங்கரவாதியின் பெயர் ·பைசல் என்பதும், அவன் அப்பகுதி லஸ்கர் தளபதி என்பதும் தெரியவந்துள்ளது.

காயங்களுடன் தப்பிச் சென்ற மற்றொரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான தேடுதல் நடைபெற்று வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
About Writer
Webdunia