1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஆந்திராவில் 10 ந‌க்சலை‌ட்டுக‌ள் சுட்டுக்கொலை!

மாவோயிஸ்ட் ந‌க்சலை‌ட் கம்மம் சார்லா மன்டால்
சி.பி.ஐ. மாவோயிஸ்ட் ந‌க்சலை‌ட் இய‌க்க‌த் தளபதி உட்பட 10 ந‌க்சலை‌ட்டுகளை ஆந்திர காவல்துறையினர் இன்று சுட்டுக்கொன்றனர்.

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்லா மன்டால் அருகே காவல்துறையினருக்கும், மாவோயிஸ்ட் ந‌க்சலை‌ட்டுகளு‌க்கு‌ம் இடையே நடந்த கடு‌ம் மோத‌லி‌ல் 10 ந‌க்சலை‌ட்டுக‌ள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ந‌க்சலை‌‌ட்டுக‌ளிட‌ம் இருந்து ஏ.கே. 47 வகை துப்பாக்கி உட்பட அதிக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவி‌த்தனர்.

காவல்துறை தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவு‌ம் வெளியிடப்படவில்லை.