1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காவ‌ல்துறை ந‌வீனமா‌க்கலு‌க்கு கூடுத‌ல் ‌நி‌தி: பா‌ட்டீ‌ல்!

காவ‌ல்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் ஹைதராபா‌த்‌
காவ‌ல்துறை ‌வி‌‌ரிவா‌க்க‌ம், ந‌வீனமா‌க்கலு‌க்கு ம‌த்‌திய அரசு கூடுத‌ல் ‌நி‌தி ஒது‌க்க உ‌ள்ளதாக ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் கூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து ஹைதராபா‌த்‌தி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல், "ம‌த்‌திய அர‌சி‌ன் ‌நி‌தி கூடுதலாக‌த் தேவை‌ப்படு‌ம் காவ‌ல்துறையை ‌வி‌ரிவா‌க்குத‌ல், ந‌‌வீனமா‌க்குத‌ல் ஆ‌கிய ‌தி‌ட்ட‌ங்க‌ள் தொட‌ர்பாக ம‌ா‌நில முத‌ல்வ‌ர்களுட‌ன் பே‌சி வரு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

ச‌ட்ட‌ம் ஒழு‌ங்கை‌ப் பராம‌ரி‌ப்ப‌தி‌ல் மா‌நில‌‌க் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் ப‌ணியை‌ப் பாரா‌ட்டிய பா‌ட்டீ‌ல், ம‌ற்ற நாடுகளுட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் நமது காவ‌ல்துறை‌யின‌ர் ‌சிற‌ப்பாக‌ச் செய‌ல்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்றா‌ர்.