1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அசா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 4 பே‌ர் ப‌லி, 14 பே‌ர் கவலை‌க்‌கிட‌ம்!

அசா‌ம் குண்டு வெடி‌ப்பு தேமாஜி ஜோனாய் உல்பா தீவிரவாதிகள்
அசாமில் நேற்றிரவு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் நா‌ன்கு பே‌‌ர் ப‌லியா‌யின‌ர். 58 பேர் படுகாயம் அடைந்தனர். இ‌தி‌ல் 14 பே‌ர் ‌நிலைமை கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது.

அசாமில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற இடத்தில் நேற்றிரவு லிரிகாங் என்ற உள்ளூர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தொலைபேசி இணைப்பகம் ஒன்றின் அருகே ச‌க்‌தி வா‌ய்‌ந்த குண்டு வெடித்தது.

இ‌தி‌ல் நா‌ன்கு பே‌ர் ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர். 58 பே‌ர் படுகாய‌‌ம் அடை‌ந்தன‌ர். இ‌‌தி‌ல் 14 பே‌ர் ‌நிலைமை ‌மிகவு‌ம் கவலை‌க்‌கிடமாக உ‌ள்ளது.

இந்த சம்பவத்திற்கு உல்பா தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ர் சந்தேகி‌ன்றன‌ர். குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.