1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ப‌யி‌ற்‌சி‌யி‌ல் எ‌றிகணை வெடி‌த்து 2 காவல‌ர்க‌ள் ப‌லி!

ஹ‌ரியானா‌ ப‌ஞ்‌ச்குலா எ‌றிகணை ச‌ண்டிக‌ர்
ஹ‌ரியானா‌வி‌ல் ப‌யி‌ற்‌சி‌யி‌ன்போது எ‌தி‌ர்பாராத வகை‌யி‌ல் எ‌றிகணை வெடி‌‌த்த‌தி‌ல் ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல் படையை‌ச் சே‌ர்‌ந்‌த 2 காவல‌ர்க‌ள் ப‌லியா‌ன‌துட‌ன் 12 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ப‌ஞ்‌ச்குலா மாவ‌‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள பு‌ண்‌ட் ம‌ன்‌ட்லே ப‌யி‌ற்‌சி‌த் தள‌த்‌தி‌ல், இ‌ன்று காலை ம‌த்‌திய ‌ரி‌ச‌ர்‌வ் காவ‌ல் படை‌யின‌ர் ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி‌‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, இல‌க்கை நோ‌க்‌கி‌க் காவ‌ல‌ர்க‌ள் செலு‌‌த்‌திய எ‌றிகணை வ‌ழி‌யிலேயே ‌விழு‌ந்து வெடி‌த்தது. இ‌‌வ்‌விப‌த்‌தி‌‌ல் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த 2 காவல‌‌‌ர்க‌ள் ப‌லியானதுட‌ன், 12 பே‌ர் காயமடை‌ந்தன‌ர்.

காயமடை‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ச‌ண்டிக‌ர் அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன‌ர்.