1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌விமான ‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் நாளை முத‌ல் போரா‌ட்ட‌ம்!

விமான நிலைய ஊழியர்கள் பெங்களூர் ஐதராபாத் மத்திய அரசு டெல்லி
நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுபட உ‌ள்ளதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பெங்களூர், ஐதராபாத்தில் புதிதாக அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியதும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்கள் மூடப்பட உ‌ள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இத‌ற்கு நாடு முழுவதும் உள்ள விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடு‌த்து, விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்புக்கும், விமான‌த்துறை அமைச்சகத்துக்கும் இடையே இது தொட‌ர்பாக நேற்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் விமான நிலைய ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாளை முதல் நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற போராட்ட‌த்‌தி‌ல் ஈடுபட உ‌ள்ளதாக அறிவித்துள்ளனர்.