1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் பகத் சிங் சிலை!

நாடாளுமன்ற‌ம் பகத் சிங் சிலை ம‌க்களவை‌ சோமாநாத் சாட்டர்ஜி
நாடாளுமன்ற வளாகத்தில் பகத் சிங் திருவுருவ‌ச் சிலை நிறுவப்படும் என்று ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோமாநாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.

இன்று ம‌க்களவையில் இதை அறிவித்த சோமாநாத் சாட்டர்ஜி, பகத் சிங் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருக்கிறது. திருவுருவ‌ச் சிலைகள் மற்றும் படங்களை நிறுவும் அனுமதி அளிக்கும் குழு, இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது எ‌ன்றா‌ர்.

நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் பகத்சிங்கின் சிலை 18 அடி உயரம் கொண்டதாக இருக்கும். இது வெண்கலத்தால் வடிவமைக்கப்படும். இதை புகழ்பெற்ற சிற்பி ராம்.வி.சுதார் உருவாக்குகின்றார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் பகத் சிங் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்படும் என்று சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.