1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அசாம் சாலை விபத்தில் 12 பேர் பலி

அசாம் சாலை விபத்தில் 12 பேர் பலி
அசாம் மாநிலம் சோனாபுர் அருகே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்தில் இருந்த 12 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை குவஹாத்தியில் இருந்து சிலாபத்தார் சென்று கொண்டிருந்த பேருந்து சோனாபுர் அருகே இருந்த மேம்பாலத்தைக் கடக்க முற்பட்டது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் பேருந்தில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பேருந்தில் பெண்களோ, குழந்தைகளோ யாரும் இல்லை.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia