அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்குப் பலன்கள் அதிகம் என்பதால், அதில் கையெழுத்திட மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது என்று புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி கஸ்துரி ரங்கன் கூறியுள்ளார்.