1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ந‌ந்‌தி‌கிரா‌ம் து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: ம.பு.க. அ‌றி‌க்கை தா‌க்க‌ல்!

மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் ந‌ந்‌தி‌கிரா‌‌ம் ‌சி.‌பி.ஐ கொ‌ல்க‌ட்டா உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌‌ம் ‌நீ‌திப‌தி எ‌ஸ்.எ‌ஸ்.‌நி‌ஜ்ஜா‌ர் ‌பினா‌கி ச‌ந்‌திரா ர‌ஞ்ச‌ன் ரா‌ய் ‌சியாம‌ல் க‌ண்டி
மே‌ற்குவ‌ங்க மா‌நில‌ம் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு தொட‌ர்பான வழ‌க்‌கி‌ல் ம‌த்‌திய‌‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌ம் (‌சி.‌பி.ஐ.) தனது இறு‌தி அ‌றி‌க்கையை கொ‌ல்க‌ட்டா உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்தது.

தலைமை ‌நீ‌திப‌தி எ‌ஸ்.எ‌ஸ்.‌நி‌ஜ்ஜா‌ர், ‌நீ‌திப‌தி ‌பினா‌கி ச‌ந்‌திரா ஆ‌கியோ‌ர் அட‌ங்‌கிய முத‌ன்மை அம‌ர்வு மு‌ன்பு இ‌வ்வழ‌க்கு ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, ம.பு.க. சா‌ர்‌பி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ர‌ஞ்ச‌ன் ரா‌ய் ‌விசாரணை அ‌றி‌க்கையை‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

அ‌ப்போது, அ‌ந்த அ‌றி‌க்கையை ‌நீ‌திம‌ன்ற‌ப் ப‌திவாள‌ர் ‌சியாம‌ல் க‌ண்டி ச‌க்கரவ‌ர்‌த்‌தி‌யிட‌ம் சம‌ர்‌ப்‌பி‌க்குமாறு ம.பு.க.‌வி‌ற்கு ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டன‌ர். மேலு‌ம், அ‌ந்த அ‌றி‌க்கையை முழுமையாக‌ப் படி‌த்த ‌பி‌ன்பு வழ‌க்கு ‌விசாரணை‌க்கான அடு‌த்த தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கூ‌றின‌ர்.

மு‌‌ன்னதாக இ‌ந்த வழ‌க்‌கி‌ல் தனது இடை‌க்கால அ‌றி‌க்கையை கட‌ந்த டிச‌ம்ப‌ர் மாத‌ம் 17 ஆ‌ம் தே‌தி கொ‌ல்க‌ட்டா உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம.பு.க. தா‌க்க‌ல் செ‌ய்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.