1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை!

இந்தியா எய்ட்ஸ் ஒரிசா உதவி பரமேஸ்வர் சவைன்
இந்தியாவிலேயே முதன்முறையாக, எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க ஒரிசா அரசு முடிவு செய்துள்ளது.

'மாநில அரசின் 'மது பாபு பென்ஷன் யோஜனா' திட்டத்தின்கீழ் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட உள்ளது' என்று ஒரிசா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் பரமேஸ்வர் சவைன் கூறினார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முதற்கட்டமாக, 6,132 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாநிலத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள த்ரோம் கன்ஜம் மாவட்டத்தில் தான் இத்திட்டத்திலும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர்.

இந்தியாவிலேயே ஒரிசா மாநிலத்தில் தான் முதன்முறையாக இத்திட்டம் அறிமுக‌ம் செ‌ய்யப்பட்டு‌ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் மனைவிமார்களுக்கு முக்கியத்துவம் அளித்து உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.