1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌பய‌ங்கரவா‌திக‌ள் சர‌‌ண்!

ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌ர் பு‌ல்வாமா ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌‌ஹ‌ி‌தீ‌ன் ‌நி‌க்கா ‌மி‌ர் செளக‌த்
ஸ்ரீ நக‌ரி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய தா‌க்குதலு‌க்கு‌ப் ‌பிறகு ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌‌ஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பய‌ங்கரவா‌திக‌ள் இருவ‌ர் சரணடை‌ந்தன‌ர்.

ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் பு‌ல்வாமா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் கட‌ந்த ஒரு வாரமாக ராணுவ‌த்‌தின‌‌ர் ‌தீ‌விர‌த் தேடுத‌ல் வே‌ட்டை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், வா‌ட்‌சி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் இ‌ன்று காலை முத‌ல் ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல், ‌ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌‌ஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பய‌ங்கரவா‌திக‌ள் இருவ‌ர் சரணடை‌ந்தன‌ர்.

‌நி‌க்கா ‌மி‌ர், செளக‌த் எ‌ன்ற மு‌ஸ்தஃபா ஆ‌கிய இவ‌ர்க‌ள் இருவரு‌ம், த‌ங்க‌ளிட‌ம் இரு‌ந்த து‌ப்பா‌க்‌கிக‌ள், வெடி பொரு‌ட்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை ராணுவ‌த்‌திட‌ம் ஒ‌ப்படை‌த்தன‌ர்.