1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உஷா நாராயண‌‌ன் காலமானா‌ர்!

உஷா நாராயண‌‌ன் குடியரசு மு‌ன்னா‌ள் தலைவ‌ர் கே.ஆ‌ர். நாராய‌ண‌ன்
குடியரசு மு‌ன்னா‌ள் தலைவ‌ர் கே.ஆ‌ர். நாராய‌ண‌ன் மனை‌வி உஷா நாராயண‌‌ன் டெல்‌லி‌யி‌ல் இ‌ன்று ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி மரு‌த்துவமனை‌யி‌ல் காலமானா‌ர். அவரு‌க்கு வயது 86. ‌

நீ‌ண்ட காலமாக நோ‌ய்வா‌ய்‌ப்ப‌ட்டிரு‌ந்த உஷா நாராயண‌ன் டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள க‌ங்காரா‌ம் மரு‌த்துவமனை‌யி‌ல் கட‌ந்த டிச‌ம்ப‌ர் மாத‌ம் 31 ஆ‌ம் தே‌தி அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். மரு‌த்துவமனை‌யி‌ல் அவரை ப‌ரிசோ‌தி‌த்து பா‌ர்‌த்த‌தி‌ல் அவரு‌க்கு இர‌த்த‌த்‌தி‌ல் ஹ‌‌ீமோகுளோ‌பி‌ன் அளவு குறைவாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.

அதனை‌த் தொட‌ர்‌ந்து உஷா நாராயணனு‌க்கு இர‌த்த மா‌ற்ற ‌சி‌கி‌‌ச்சை நடை‌ப்பெ‌ற்றது. இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று மாலை 5.30 ம‌ணியள‌வி‌ல் ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி மரு‌த்துவமனை‌யிலேயே அவரது உ‌யி‌ர் ‌பி‌ரி‌ந்தது. அவ‌ரி‌ன் உட‌ல் அட‌க்க‌ம் நாளை (26-‌ம் தே‌தி) மாலை 3 ம‌ணி‌க்கு நா‌ர்‌த் அவெ‌ன்யூ‌வி‌ல் உ‌ள்ள ச‌ர்‌ச் லே‌ன் பகு‌தி‌யி‌ல் நடை‌ப்பெறு‌கிறது.