1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வட இ‌ந்‌தியாவை வா‌ட்டு‌ம் கடு‌ங்கு‌ளி‌ர்!

வட இ‌ந்‌தியா‌வி‌ல் 10 ஆ‌ண்டு கடு‌ங்கு‌ளி‌ர் டெ‌ல்‌லி‌ ராஜ‌ஸ்தா‌ன்
வட இ‌ந்‌தியா‌வி‌ல் கட‌ந்த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌‌ற்கு வெ‌ப்ப‌நிலை குறை‌ந்து‌, கடு‌ங்கு‌ளி‌ர் ‌நிலவுவதா‌ல் பொதும‌‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று சராச‌ரி வெ‌ப்ப‌நிலை 2.6 டி‌கி‌ரியாக‌ப் ப‌திவானது. இது வழ‌க்க‌த்தை‌விட 5 டி‌கி‌ரி குறைவானது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ன்னு‌ம் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு சராச‌ரி வெ‌ப்ப‌நிலை 3 டி‌கி‌ரியாக ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று‌ம், ப‌னி‌ப்பொ‌ழிவு தொடரு‌ம் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

ராஜ‌ஸ்தா‌ன், ப‌‌ஞ்சா‌ப், ஹ‌ரியானா மா‌நில‌ங்க‌ளி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் வெ‌ப்ப‌நிலை பூ‌ஜ்ய‌த்‌தை ‌விட‌க் குறைவாக‌ப் ப‌திவானது.

ப‌ஞ்சா‌ப்‌பி‌ல் குறை‌ந்தப‌ட்சமாக மைன‌ஸ் 2 டி‌கி‌ரியு‌ம், அ‌திகப‌ட்சமாக 4 டி‌கி‌ரியு‌ம் வெ‌ப்ப‌நிலை ப‌திவா‌கியு‌ள்ளது. ஹ‌ரியானா‌வி‌ல் குறை‌ந்தப‌ட்சமாக 1 டி‌கி‌ரியு‌ம், அ‌திகப‌ட்சமாக 5 டி‌கி‌ரியு‌ம் வெ‌ப்ப‌நிலை ப‌திவா‌னது.

ரா‌ஜ‌ஸ்தா‌ன், சுரு பகு‌தி‌யி‌ல் குறை‌ந்தப‌ட்சமாக மைன‌ஸ் 2 டி‌கி‌ரி ‌வெ‌ப்ப‌நிலை ப‌திவானது. மா‌‌நில‌த்‌தி‌ன் ம‌ற்ற பகு‌திக‌ளி‌ல் அ‌திகப‌ட்சமாக 5 டி‌கி‌‌ரி வெ‌ப்ப‌நிலை ப‌திவா‌கியு‌ள்ளது.

புக‌ழ்பெ‌ற்ற சு‌ற்றுலா‌த்தலமான ‌சி‌ம்லா‌வி‌ல் வெ‌ப்ப‌நிலை கட‌ந்த 2 நா‌ட்களாக மைன‌ஸ் 2.2 டி‌கி‌ரியாக ‌நீடி‌க்‌கிறது. இ‌ங்கு‌ள்ள ஏ‌ரிக‌ள் ஒருவாரமாக உறை‌‌ந்து‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர், உ‌த்தரக‌ண்‌ட், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌ம் ஆ‌கிய மா‌நில‌ங்க‌ளி‌‌ன் ‌சில பகு‌திக‌ளி‌ல் ப‌னி‌ப்பொ‌ழிவு தொடரு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.