1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ச‌ட்டீ‌ஸ்க‌ரி‌ல் 5 ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை!

ச‌ட்டீ‌ஸ்க‌ர் ந‌க்சலை‌ட்டுக‌ள் சு‌ட்டு‌க்கொலை
ச‌ட்டீ‌ஸ்க‌ர் மா‌நில‌ம் கா‌ன்கெ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ன்று காவ‌ல் துறை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ந‌க்சலை‌ட்டுக‌ள் 5 பே‌ர் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

கு‌ட்கா‌ன் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் இ‌ன்று அ‌திகாலை ந‌க்சலை‌ட்டுக‌ள் முகா‌மி‌ட்டு‌ள்ளதாக‌‌க் கிடை‌த்த தகவ‌லி‌ன் பே‌ரி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டதாக‌க் காவ‌ல் துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ர‌த்த‌ன் லா‌ல் டா‌ங்‌கி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 5 ந‌க்சலை‌ட்டுக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். ஆனா‌ல் அவ‌ர்க‌ளி‌ன் உட‌ல்களை கூ‌ட்டா‌ளிக‌ள் எடு‌த்து‌க் கொ‌ண்டு த‌ப்‌பி‌வி‌ட்டன‌ர். ச‌ம்பவ இட‌த்‌தி‌ல் இரு‌ந்து குழா‌ய் வெடிகு‌ண்டுக‌ள், து‌ப்பா‌க்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ஏராளமான ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.