1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஒ‌‌‌ரிசா‌வி‌ல் ந‌க்சலை‌ட்டுக‌ள் தா‌க்குத‌ல்: காவல‌ர் ப‌லி!

ஒ‌ரிசா ரூ‌ர்கெலா ந‌க்சலை‌ட்டுக‌ள் ப‌ன்‌ஸ்ஜா‌ர் சோதனை‌ச் சாவடி‌
ஒ‌ரிசா மா‌நில‌ம் ரூ‌ர்கெலா‌வி‌ல் காவ‌ல்துறை சோதனை‌ச் சாவடி ‌மீது ந‌க்சலை‌ட்டுக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் காவல‌ர் ஒருவ‌ர் ப‌லியானா‌ர். மேலு‌ம் 7 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ஒ‌ரிசா-ஜா‌ர்க‌ண்‌ட் எ‌ல்லை‌யி‌ல் உ‌ள்ள ப‌ன்‌ஸ்ஜா‌ர் சோதனை‌ச் சாவடி‌யி‌ல் இ‌ன்று காலை நுழை‌ந்த 50 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ந‌க்சலை‌ட்டுக‌ள், து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு‌ம் பெ‌ட்ரோ‌ல் கு‌ண்டுகளை ‌வீ‌சியு‌ம் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தின‌ர்.

இ‌தி‌ல் காவல‌ர் ஒருவ‌ர் உட‌ல்கரு‌கி ப‌லியானா‌ர். மேலு‌ம் 7 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் இ‌ஸ்பா‌ட் பொது மரு‌த்துவமனை‌யி‌ல் ‌‌சி‌கி‌‌ச்சை‌க்காக அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ச‌ம்பவ‌ம் நட‌‌ந்தபோது சோதனை‌ச் சாவடி‌யி‌ல் 20 காவல‌ர்க‌‌ள் ப‌ணி‌யி‌ல் இரு‌ந்ததாகவு‌ம், அவ‌‌ர்க‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் படுகாயமடை‌ந்தன‌ர் எ‌ன்று‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌ரி ஜே.கே.ஜா கூ‌றினா‌ர்.