1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பு‌த்தா‌ண்டு அமை‌தியை கொ‌ண்டு வர‌ட்டு‌ம்: ‌‌பிரதம‌ர் வா‌ழ்‌த்து!

பு‌த்தா‌ண்டு அமை‌தி பாதுகா‌ப்பு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் வா‌ழ்‌த்து
இ‌ந்த பு‌த்தா‌ண்டு, உலக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள ம‌க்களு‌க்காக அமை‌தி, பாதுகா‌ப்பு ம‌ற்று‌ம் வள‌ர்‌ச்‌சியை‌க் கொ‌‌ண்டு வர‌ட்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் வா‌ழ்‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

பு‌த்தா‌ண்டை மு‌ன்‌னி‌ட்டு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விடு‌த்து‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், "கட‌ந்த கால‌ங்க‌ளி‌ல் நா‌ம் அடை‌ந்த இல‌க்குக‌ள், வெ‌ற்‌றிக‌ள், செ‌ய்த தவறுக‌ள் ஆ‌கியவ‌ற்றை‌‌ப் புர‌ட்டி‌ப் பா‌ர்‌க்கு‌ம் நேர‌‌மாக பு‌த்தா‌ண்டை கருதுவோ‌ம்.

இது ந‌ம்முடைய பல‌த்தையு‌ம் பல‌வீன‌த்தையு‌ம் அ‌றிவுபூ‌ர்வமாக எடைபோட உத‌வுவதுட‌ன், பு‌திய இல‌க்குகளை ‌நி‌ர்ண‌‌‌யி‌க்கவு‌ம் வா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌ம்.

நமது ஒ‌ன்றுப‌ட்ட, த‌னி‌ப்ப‌ட்ட கு‌றி‌க்கோ‌ள்களை அடைவத‌ற்கான ‌பு‌திய முய‌ற்‌சிகளை‌ப் ப‌ட்டிய‌லி‌ட்டு‌த் தொட‌ங்குவத‌ற்கு இதுவே நேரமாகு‌ம்.

ந‌ம்முடைய எ‌தி‌ர்கால‌ச் சவா‌ல்களை நோ‌க்‌கி வெ‌ற்‌றி நடை போடுவத‌ற்கு‌ம், நமது ஜனநாயகமான ப‌ண்பா‌ட்டு‌க் கூறுக‌ள் கு‌றி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சியடைவத‌ற்கு‌ம் இதுவே நேரமாகு‌ம்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.