1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உ.‌பி.‌யி‌ல் 11 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌‌க்‌ஸ். ப‌‌றிமுத‌ல்!

சோனெப‌த்ரா மாவோ‌யி‌‌ஸ்டு ஆ‌‌ர்.டி.எ‌க்‌ஸ் ‌வி‌ந்‌தியா சபா‌த்
உ‌த்தர‌பிரதேச மா‌நில‌த்‌தில‌் மாவோ‌யி‌‌ஸ்டுக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் ‌நிறை‌ந்த சோனெப‌த்ரா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 11 ‌‌கிலோ ஆ‌‌ர்.டி.எ‌க்‌ஸ். உ‌ள்‌ளி‌ட்ட பய‌ங்கர வெடிபொரு‌ட்களை காவ‌ல் துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌‌ர்.

‌வி‌ந்‌தியா பகு‌தி‌யி‌ல் மறை‌ந்து‌ள்ள மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ‌மிக‌ப்பெ‌ரிய தா‌க்குதலு‌க்கு‌த் தயாரா‌கி வரு‌வதாக‌க் ‌கிடை‌த்த தகவ‌லி‌ன் பே‌ரி‌ல் தேடுத‌ல் வே‌ட்டை நட‌த்த‌ப்ப‌ட்டதாகவு‌ம், காவ‌ல்துறை‌யி‌ன் நடவடி‌க்கையை அ‌றி‌ந்த மாவோ‌யி‌ஸ்டுக‌ள் த‌ப்‌பி ஓடி‌வி‌ட்டதாகவு‌ம் காவ‌ல்துறை தலைவ‌ர் சபா‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மாவோ‌‌யி‌‌‌ஸ்டுக‌ள் பது‌ங்‌கி‌யிரு‌ந்த கா‌ட்டு‌ப் பகுத‌ி‌யி‌ல் இரு‌ந்து 11 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ்., 176 ஜெல‌ட்டி‌ன் கு‌ச்‌சிக‌ள், 10 உருளை கு‌ண்டுக‌ள் உ‌ட்பட ஏராளமான வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.