1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வா‌ஜ்பா‌ய்‌க்கு 84 ஆவது ‌பிற‌ந்தநா‌ள்: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

வா‌ஜ்பா‌ய்‌க்கு 84 ஆவது ‌பிற‌ந்தநா‌ள்: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!
நமது நா‌ட்டி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌ய் இ‌ன்று தனது 84 ஆவது ‌பிற‌ந்த நாளை‌க் கொ‌ண்டாடு‌கிறா‌ர். அவரு‌க்கு குடியரசு தலைவ‌ர், ‌‌பிரதம‌ர் உ‌‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு மு‌க்‌கிய‌த் தலைவ‌‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

குடியரசு தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல் கடித‌ம் மூல‌ம் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்தா‌ர். ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று அ‌திகாலை புது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள வா‌ஜ்பா‌யி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு நே‌ரி‌ல் செ‌ன்று வா‌ழ்‌த்‌தினா‌ர்.

பா‌.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் எ‌ல்.கே.அ‌த்வா‌னி, ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், மத‌ன்லா‌ல் குரானா உ‌ள்ப‌ட‌ப் பல‌ர், குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி‌யி‌ன் பத‌வியே‌ற்பு ‌விழா‌வி‌ற்கு‌ச் செ‌ல்ல‌விரு‌ந்த காரண‌த்தா‌ல், நே‌‌ற்று மாலையே த‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌த்துகளை‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.