1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கு‌‌ற்ற‌‌ங்களை‌த் தடு‌க்க சை‌ப்ர‌ஸ் நா‌ட்டுட‌ன் ஒ‌‌ப்ப‌‌ந்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

பய‌ங்கரவாத‌ம் போதை‌ப் பொரு‌ள் சை‌ப்ர‌ஸ் ஒ‌ப்ப‌ந்த‌ம்
போதை‌‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல், ஆயுத‌க் கட‌த்த‌ல், பய‌ங்கரவாத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ச‌ர்வதேச‌க் கு‌ற்ற‌ங்களை‌த் தடு‌க்கு‌‌ம் வகை‌யி‌ல் தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற‌த்‌தி‌ற்காக சை‌ப்ர‌ஸ் நா‌ட்டுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்வத‌ற்கு அமை‌ச்சரவை இ‌ன்று ஒ‌ப்புத‌ல் வழ‌ங்‌கியு‌ள்ளது.

பய‌ங்கரவாத‌ம், போதை‌ப் பொரு‌ள் க‌ட‌த்த‌ல் ப‌‌ற்‌றிய தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம், ‌விசாரணை, தடு‌ப்பு நடவடி‌க்கை போ‌ன்ற அ‌ம்ச‌ங்க‌ளி‌ல் இருநா‌டுகளு‌க்கு‌‌ம் இடை‌யிலான ஒ‌த்துழை‌ப்பை இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மே‌ம்படு‌த்து‌ம்.

இருதர‌ப்‌பிலு‌ம் உ‌ள்ள ச‌ட்ட அமலா‌க்க‌ப் ‌பி‌ரிவு அ‌திகா‌ரிக‌ள், உளவு‌த் துறை அ‌திகா‌ரிக‌ள் ஆ‌கியோரு‌க்கு இடை‌யிலான ஒ‌த்துழை‌ப்பை மே‌ம்படு‌த்துவத‌ற்கான க‌ட்டமை‌ப்பை உருவா‌க்கவு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்.