1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குஜராத் தேர்தல் : பெரும்பான்மை இடங்களில் பா.ஜ.க. முன்னிலை!

குஜராத் மாநில சட்டப்பேரவை  தேர்தல் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் சுயேச்சைகள் மணி நகர் முதலமைச்சர் மோடி தின்ஷா பட்டேல்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது!

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், இதுவரை முன்னிலை நிலவரம் கிடைத்த 177 தொகுதிகளில் பா.ஜ.க. 110 இடங்களிலும், காங்கிரஸ் 63 இடங்களிலும் மற்ற கட்சிகள்,
சுயேச்சைகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மணி நகர் தொகுதியில் முதலமைச்சர் மோடி, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேலை விட அதிக வாக்குகள் பெற்று முன்னனியில் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
About Writer
Webdunia