1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மோடி ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் புகா‌ர்!

தே‌ர்த‌ல் நரே‌ந்‌திர மோடி குஜரா‌த் மா‌நில‌த் தே‌ர்த‌ல் கா‌ங்‌கிர‌ஸ்
தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌த்‌தி‌ன் போது "ல‌ட்சு‌‌மி தரு‌கிறே‌ன்" எ‌ன்று நரே‌ந்‌திர மோடி கூ‌றியது அ‌ப்ப‌ட்டமான ‌வி‌திமுறை ‌மீற‌ல் எ‌ன்று குஜரா‌த் மா‌நில‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் அ‌ம்மா‌நில‌க் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்க‌ள் புகா‌ர் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த 3 ஆ‌ம் தே‌தி தோரா‌ஜி பகு‌தி‌யி‌ல் நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய நரே‌ந்‌திர மோடி, 'என‌க்கு ‌நீ‌ங்க‌ள் தாமரை தாரு‌ங்க‌ள், நா‌ன் உ‌ங்களு‌க்கு ல‌ட்சு‌மி தரு‌கிறே‌ன்' எ‌ன்று பே‌சினா‌ர்.

இது அ‌ப்ப‌ட்டமான தே‌ர்த‌ல் ‌வி‌திமுறை ‌மீற‌ல் எ‌ன்று குஜரா‌த் மா‌நில‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌திட‌ம் அ‌ளி‌த்து‌ள்ள புகா‌ரி‌‌ல், மா‌நில‌க் கா‌ங்‌கிர‌ஸ் பொது‌ச் செயல‌ர் ‌கி‌ரி‌ஸ் பா‌ர்ம‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.