1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

எய்ம்ஸ் தலைவர் பதவியிலிருந்து வேணுகோபால் நீக்கம்!

அகில இந்திய அறிவியல் மருத்துவக் கழகம்  எய்ம்ஸ் வேணுகோபால் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்
டெல்லியில் உள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவக் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் பதவியிலிருந்து வேணுகோபால் நீக்கப்பட்டார்.

எய்ம்ஸ் தலைவர் பதவிக்கான வயது வரம்பை 65 ஆக நிர்ணயித்து மத்திய அரசு கொண்டுவந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று மாலை ஒப்புதல் அளித்து அரசிற்கு அனுப்பினார். அதன் அடிப்படையில் 66 வயதான மருத்துவர் வேணுகோபால் எய்ம்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கும் உத்தரவை மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்தது.