1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சிறை‌யி‌லிரு‌ந்து வெ‌ளிவ‌ந்தா‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்!

மு‌ம்பை கு‌ண்டுவெடி‌ப்பு த‌ண்டனை ச‌ஞ்ச‌ய் த‌த்‌ உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை ‌சிறை‌யி‌லிரு‌ந்து வெ‌ளிவ‌ந்தா‌ர்
மு‌ம்பை கு‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்‌‌கி‌ல் த‌ண்டனை பெ‌ற்று‌ள்ள இ‌ந்‌தி நடிக‌ர் ச‌ஞ்ச‌ய் த‌த்‌தி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணை வழ‌ங்‌கியதையடு‌த்து இ‌ன்று அவ‌ர் ‌சிறை‌யி‌லிரு‌ந்து வெ‌ளிவ‌ந்தா‌ர்.

உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் வழ‌ங்‌‌கிய ‌பிணை ஆணைக‌ளி‌ன் ஆவண‌ங்களை‌ப் பெறுவத‌ற்கு தாமதமான காரண‌த்தா‌ல் ச‌ஞ்ச‌ய் த‌த்தை ‌சிறை‌யி‌லிரு‌ந்து ‌விடு‌வி‌ப்பத‌ற்கு 2 நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டது எ‌ன்று அவருடைய வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ச‌ஞ்ச‌ய் த‌த் வரவே‌ற்பத‌ற்காக புனே‌யி‌ல் உ‌ள்ள எரவாடா ‌சிறை மு‌ன்பு ஆ‌யிர‌க்கண‌க்கான ர‌சிக‌ர்க‌ள் ‌திர‌ண்டிரு‌ந்தன‌ர். பாதுகா‌ப்‌பி‌ற்காக காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

1993 ஆ‌ம் ஆ‌ண்டு மு‌ம்பை தொட‌ர் கு‌ண்டுவெடி‌‌ப்பு வழ‌க்‌கி‌ல் ஆயுத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ச‌ஞ்ச‌ய் த‌த் உ‌ள்பட 17 பேரு‌க்கு தடா ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌சிறை த‌ண்டனை வழ‌ங்‌கியு‌ள்ளது.

இவ‌ர்க‌ள் 17 பேரு‌க்கு‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிணைய ‌விடுதலை வழ‌ங்‌கி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. இத‌ன்படி அனைவரு‌ம் ‌சிறை‌யி‌லிரு‌ந்து ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட உ‌ள்ளன‌ர். இ‌ன்று காலை ச‌ஞ்ச‌ய் த‌த், அவ‌ரி‌ன் ந‌ண்ப‌ர் யூசு‌ப் நலவ‌ல்லா உ‌ள்பட 10 பே‌ர் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.