1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இ‌ந்‌திரா கா‌ந்‌தி ‌பிற‌ந்த நா‌ள்: ‌பிரதம‌ர் ம‌ரியாதை!

‌இ‌ந்‌‌திரா கா‌ந்‌தி‌ ‌பிற‌ந்த நா‌ள் இ‌ன்று பிரதம‌ர் ம‌ரியாதை நாடு முழுவது‌ம்
நமது நா‌ட்டி‌ன் மு‌த‌ல் பெ‌ண் ‌பிரதமரான ‌இ‌ந்‌‌திரா கா‌ந்‌தி‌யி‌ன் 90வது ‌பிற‌ந்த நா‌ள் ‌விழா இ‌ன்று நாடு முழுவது‌ம் உ‌ற்சாகமாக‌க் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

புது டெ‌ல்‌லி‌யி‌ல் ச‌க்‌தி ‌ஸ்தல‌த்‌தி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திரா கா‌ந்‌தி‌யி‌ன் ‌நினை‌விட‌த்‌தி‌ல் துணை குடியரசு தலைவ‌‌ர் ஹ‌மீது அ‌ன்சா‌ரி, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ன் தலைவ‌ர் சோ‌னியா கா‌‌ந்‌தி ஆ‌கியோ‌ர் மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

சோ‌னியா கா‌ந்‌தியுட‌ன் அவ‌ரி‌ன் மக‌ன் ராகு‌ல் கா‌ந்‌தி உ‌ள்பட குடு‌ம்ப‌த்‌தின‌ர் வ‌ந்‌திரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல், அஜ‌ய் மேக‌ன் உ‌ள்‌‌ளி‌ட்ட மத்‌திய அமை‌ச்ச‌ர்க‌ளு‌ம், புது டெ‌‌ல்‌லி முத‌‌ல்வ‌‌ர் ‌ஷ‌ீலா ‌தீ‌க்‌சி‌த்து‌ம் ப‌ங்கே‌ற்றன‌ர். மு‌ன்னதாக ப‌ள்‌ளி‌க் குழ‌ந்தைக‌ள் பாட‌ல்களை‌ப் பாடி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.